1249 உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ யாருழைச் சேறியென் னெஞ்சு. என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது. 9 1250 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும். 10 126. நிறையழிதல் நிறையழிதலாவது வேட்கை மிகுதியால் தன் நிலை யழிந்து தலைமகள் கூறுதல். நெஞ்சின் மிக்கது புலப்படுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது.
|