பக்கம் எண் :

314

1258 நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்போ மெனல்.

தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?

8

1259 புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்த லுறுவது கண்டு.

புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு.

இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.

9

1260 நாணென வொன்றோ வறியலர் காமத்தாற்
பேணியார் பெட்பச் செயின்.

நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின்.

அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு

10

127. அவர்வயின்விதும்பல்

அவர்வயின்விதும்பலாவது அவர் வரவின் கண்ணே விரைதல்; காதலர் வரவு கேட்டிருத்தல் என்றவாறு. இவையெல்லாம் தோழிக்குக் கூறினவாகக் கொள்ளப்படும். நிறையழிந்தார் அப்பொழுது காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப்பார் ஆதலான், அதன் பின் இது கூறப்பட்டது.

1261 வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்
பைதனோய் யெல்லாம் கெட.

கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்.

இது வரவு வேட்கையாற் கூறியது.

1