1278 தொடிநோக்கி மென்றோளும் நோக்கி யடிநோக்கி அஃதாண் டவள்செய் தது. தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு. 8 1279 நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு மெழுநாளேம் மேனி பசந்து. எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது. 9 1280 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க ணுரைக்க லுறுவதொன் றுண்டு. நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக. 1 10 129. புணர்ச்சி விதும்பல் புணர்ச்சி விதும்பலாவது பிரிந்து கூடின தலைமகனும் தலைமகளும் புணர்தல் வேண்டி ஒருவரின் ஒருவர் முந்து முந்து விரைதல்.
1. இது பரிமேலழகர் உரை.
|