பக்கம் எண் :

322

1289 காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல்ல வை.

அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

9

1290 பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்.

தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா.

இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

10

130. நெஞ்சொடு புலத்தல்

நெஞ்சொடு புலத்தலாவது தலைமகன் பரத்தையிற் பிரிந்துழி அவனோடு புலக்கக் கருதிய தலைமகள் முற்பட அவனோடு கூடவேண்டிய நெஞ்சோடு புலந்து கூறுதல். இனி ஊடிக்கூடல் கூறுகின்றார் ஆகலின், அவ்வூடுதலின் முற்பட இது தோற்றமாதலின், முற்கூறப்பட்டது.

1291 அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது.

அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?

இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.

1