பக்கம் எண் :

326

1304 ஊடலி ணுண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று.

ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால்.

இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.

4

1305 நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது.

குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.

5

1306 துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயும் அற்று.

உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால்.

இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.

6

1307 ஊடி யவரை யுணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்.

இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.

7