பக்கம் எண் :

328

132. புலவி நுணுக்கம்

புலவி நுணுக்கமாவது தலைமகன்மாட்டுத் தவறிலவாயினும், தன் காதல் மிகுதியால் சொல்லெச்சத்தினாலும் குறிப்பெச்சத்தினாலும் வேறுபடப் பொருள் கொண்டு, தலைமகள் புலந்து கூறுதல். இது செவ்வியின் தோன்றாது ஆதலின் நுணுக்கம் ஆயிற்று.

1311 யாரினுங் காதல மென்றேனா வூடினாள்
யாரினும் யாரினு மென்று.

ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.

1

1312 இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.

2

1313 வழுத்தினாள் தும்மினே மாக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று.

யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள்.

இது தும்மினும் குற்றமென்று கூறியது.

3

1314 தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ளல்
எம்மை மறைத்திரோ வென்று.

தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்.

இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.

4