பக்கம் எண் :

329

1315 நினைத்திருந்து நோக்கினுங் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று.

தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும்.

இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.

5

1316 கோட்டுப்பூச் சூடினுங் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீ ரென்று.

பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும்.

பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.

6

1317 தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீ
ரிந்நீர ராகுதி ரென்று.

தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும்.

இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.

7

1318 உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தீ ரென்றெம்மைப்
புல்லாள் புலத்தக் கனள்.

அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள்.

இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.

8