பக்கம் எண் :

98

400 உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.

இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

10

41. கல்லாமை

கல்லாமையாவது கல்வி இல்லாமையால் உளதாகும் குற்றம் கூறுதல். மேற் கல்வி வேண்டும் என்றார் அஃது இலாதார்க்கு உளதாகும் குற்றம் என்னை என்றார்க்குக் கூறியது ஆதலான், அதன்பின் இது கூறப்பட்டது.

401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல்.

அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.

1

402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும்.

இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.

2