[ தலைமகள் காதலை நாணினாலும் மகிழ்சியாலும் அறிந்த்து ] யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்- நான் அவளை நோக்கும்போது அவள் எதிர்நோக்காது நாணித் தலைகுனிந்து நிலத்தை நோக்குவாள்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்-அதைக் கண்டு நான் அவளைநோக்காதபோது அவள் என்னை நோக்கித் தனக்குள் மகிழ்ந்து புன்னகை கொள்வாள். மென்னகையாற் புணர்ச்சி விருப்பம் வெளியாயிற்று.
|