பக்கம் எண் :

நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடை
காமுற்றா ரேறு மடல்.

 

( நாண் மட்டுமின்றி நல்லாண்மையு முடையையாதலின் மடலேற முடியாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது . )

நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் - நாணும் சிறந்த ஆண்டகைமையும் பண்டை நாளிற் கொண்டுதாணிருந்தேன் ; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்- ஆயின் அவை காமத்தால் நீங்கிவிட்டமையால் காமம் மிக்கார் ஏறும் மடலினையே இன்று உடையவனாயிருக்கின்றேன் .

என் உயிர் உடலோடு நிற்கவேண்டுமாயின் மடலேறுதல்லது வேறுவழியில்லை யென்றானாம் . நான் என்பது இழிசெயலைத் தடுக்கும் மானம் . ஆண்மையென்பது ஒன்றற்குந் தளராத உரம் .