( நாணும் நல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புணையாகவின் , அதனால் அவை நீங்குவனவல்ல என்ற தோழிக்குத் தலை மகன் சொல்லியது . ) நாணொடு நல் ஆண்மை என்னும் புணை - நான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை ; காமக் கடும்புனல் உய்க்குமே - காமமாகிய பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகின்றதே ! நான் என்செய்வேன் !. புணையென்றது மிதவையும் கட்டுமரமும் பரிசலுந் தெப்பமும் போண்ற கடத்தக் கருவிகளை . அவற்றை என்னோடு அடித்துக்கொண்டு போகுமளவு வெள்ளம் பெருக்கும் வேகமுங் கொண்ட தென்பது தோன்றக் ' கடும்புனல் ' என்றாள் . ஏகாரம் இரங்கற் பொருட்டு .
|