பக்கம் எண் :

மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண் .

 

( மடலூரும் நேரம் இன்றைக்குக் கழிந்துவிட்டதென்ற தோழிக்குச்சொல்லியது .)

பேதைக்கு என் கண் படல் ஒல்லா - பேதைத் தன்மையுள்ள என் தலைவி கரணியமாக எனக்கு இராமுழுதுங் கண்ணடைப்பதேயில்லை ; யாமத்தும் மடல் ஊர்தல் உள்ளுவேன் மன்ற - அதனால் எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் நான் மடலேறக் கருதுவது உறுதி .

இனி , நாளைக் குறைமுடிப்பே னென்று கடத்தி வைக்க வேண்டாமென்பதாம் . ' பேதை ' யென்பது இங்குப் பருவங்குறியாது இளமையும் மடமையுங் குறித்து நின்றது . ' மன்ற ' தேற்றப் பொருளிடைச்சொல் .