பக்கம் எண் :

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில் .

 

(அறிவிலராய மகளிரினும் அதனையுடைய ஆடவரன்றோ காமநோயால் வருந் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளற்பாலர் என்ற தோழிக்குச் சொல்லியது . )

கடல் அன்ன காமம் உழந்தும் - கடல் போலக் கரையற்ற காமநோயால் வருந்தியும் , மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் - அதை நீக்குதற்கு மடலேறாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப் போலப் பெருந்தகுதியுடைய பிறப்பு இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை .

அத்தகுதி ஆடவர்க்கு இயற்கையாக இன்மையை நீஅறிந்திலை போலும் என்பதாம் . இதுவரையுந் தலைமகன் கூற்று . உம்மை உயர்வு சிறப்பு .