பக்கம் எண் :

நிறையரியர் மன்னளிய ரென்னாது காம
மறையிறந்து மன்று படும் .

 

(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகிய வழித் தலைமகள் சொல்லியது. )

நிறை அரியர் ( என்னாது ) - இவர் நிறை யென்னும் அடக்கப் பண்புடைமையால் இவரை நாம் மேற்கொள்வது அரிது என்று அஞ்சுதல் செய்யாது ; மன் அளியர் என்னாது - மிகவும் .அளிக்கத்தக்கார் என்று இரங்குதலுஞ் செய்யாது ; காமம் மறை இறந்து மன்று படும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து அம்பலத்திற்கு வருவதாயிற்று .

உலகத்துப் பெண்பாலார் காமத்தியல்பு கூறுவாள் போன்று , தன் காமம் பெருகியவாறும் இனி அறத்தொடு நிற்றல் வேண்டு மென்பதும் குறிப்பாற் கூறியவாறு . ' என்னாது ' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவித்துரைக்கப்பட்டது . இது அம் பலின் பிற்பட்ட போதுநிலை , காப்புச்சிறையாவது , தலைமகள்மீது ஐயுற்ற செவிலியும் நற்றாயும் அவளை வீட்டைவிட்டு வெளியேறாவாறு . காவல் செய்தல் .