பக்கம் எண் :

அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம
மறுகின் மறுகு மருண்டு .

 

(இதுவுமது)

என் காமம்-எனது காமம் ; எல்லாரும் அறிகிலார் என்று - யான் இதுவரை அடங்கி நின்றதால் எல்லாரும் என்னை அறிந்திலர் , இனிமேல் அவ்வாறிராது நானே வெளிப்பட்டறிவிப் பேனென்று எண்ணி ; மறுகில் மருண்டு மறுகும் - இவ்வூர்ப் பெருந் தெருவெல்லாம் மயங்கிச் சுழலும் .

மயங்குதல் அலரத் தொடங்குதல் ; மறுகுதல் அலராதல் . இனி அறத்தொடு நிற்றல்வேண்டும் என்பது குறிப்பு . அறிவிலார் என்பதும் பாடம் .