(இதுவுமது) காமம் கவ்வையால் கவ்விது-என் காமம் இவ்வூரார் எடுத்த அலராலே அலர்தலைக் கொண்டுள்ளது; அது இன்றேல் தன்மையிழந்து தவ்வென்னும்-அவ்வலரில்லையாயின் சுவையிழந்து சப்பென்றிருக்கும். கவை-கவ்வை=பிளப்பு,பிரிவு,மலர்வு,அலர். கவ்வை-கவ்விது. அலர்தல் அலர்க் கூற்றுப் பரவுதலும் காமம் வளர்தலும், 'தன்மை' இன்பம் பயத்தல். தவ்வுதல்-தாழ்தல்.ஏதேனுமொரு பாடத்துறையில் மாணவர் தாழ்வாயிருப்பதைக் தவ்வல் என்பது நெல்லை நாட்டு வழக்கு.
|