பக்கம் எண் :

அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை.

 

[வரைவிடை வைத்துப் பிரிவின்க ணாற்றாளாகிய தலைமகள் அவன் வந்து சிறைப்புறத்தானாத லறிந்து, அலரஞ்சி யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை-தலை நாளில் தம்மை எதிர்ப்பட்ட போதே, நான் உன்னை விட்டு ஒருபோதும் பிரியேன்; ஆதலால் நீ அஞ்சுதலை விட்டுவிடு என்று தேற்றியவர் தாமே, இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்தபின்; அலர்நாண ஒல்வதோ - அயலார் கூறும் அலருக்கு நாம் நாணக் கூடுமோ? கூடாதே!.

கண்டார் நாணும் நிலைமையிலுள்ள நாம் நாணுதற்கு வழியேது என்பதாம்.