(தூதுவிடாமை பற்றித் தோழியொடு புலந்து சொல்லியது.) நட்பினுள் துயர்வரவு ஆற்றுபவர் - இன்பந்தருதற்குரிய நட்புநிலைமையிலேயே துன்புறுதலை வருவிப்பவர் துப்பின் எவன் ஆவர்கொல் - துன்பமே தருதற்குரிய பகைமை நிலைமையில் எத்தகைய ராவரோ ! தெரிகிலது. துயர்வரவை நீக்கலாயிருக்கவும் அது செய்கின்றிலையெனத் தோழியொடு புலக்கின்றமையின் , அவளைத் துயர் வரவுசெய்தாளாக்கியும் பிறத்தியாக்கியுங் கூறினாள் . துப்பு என்பது வலிய பகை. துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் (புறம் . 380அ) 'எவன்' அஃறிணைச் சொல் , 'மன்' அசைநிலை. 'கொல்' ஐயம்.
|