இதுவுமது இரா இந்நாள் நெடிய கழியும் - முன்பு நம் காதலரொடு கூடி யின்புற்ற நாட்களிலெல்லாம் குறிய வாயிருந்த இரவுகள், இன்று அவரினின்று பிரிந்து துன்புறுங் காலத்தில் மிக நீண்டு செல்கின்றனவா யுள்ளன ; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - ஆதலால், அக் கொடியார் கொடுமையினும் மிஞ்சிய கொடுமை செய்வனவாகும். தன் ஆற்றாமை கருதாது பிரிந்தமையின் ' கொடியார் ' என்றும், வரவு நீட்டித்தமையின் 'கொடுமை ' என்றும், தன் துன்பங்கண்டிரங்காமையானும் முன்னினும் நெடியவாய்க் கழிந்தமையானும் ' கொடுமையிற்றாங்கொடிய' என்றும், கூறினாள்.
|