பக்கம் எண் :

படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்.

 

(இதுவுமது)

கடல் ஆற்றாக் காமநோய் செய்த என் கண்-கடலுஞ் சிறிதாம் வண்ணம் பேரளவுள்ள காமநோயை எனக்குச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும்-அத்தீவினையால் தாமும் தூக்கம் பெறாதனவாய்த் துன்பபப்படுகின்றன.

வினைவிதைத்தவன் வினையறுப்பானாதலால், என்னைத் துன் புறுத்திய கண்கள் தாமும் துன்புறுகின்றன என்றாள்; காமநோய் காட்சியால் வந்ததனால், கண்ணே அந்நோயைத் தந்ததாகக் கூறினாள். கண் துன்புறுதலாவது அழுதலும் எரிச்சல் கொள்ளுதலும்.