(இதுவுமது) எமக்கு இந்நோய் செய்தகண் தாம் இதற்பட்டது-எமக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது; ஒ ஒ இனிதே-மிகவும் இனிதாவதே. துன்பமென்றது தூங்கா தழுதலை.எம்மைத் துன்புறுத்தினார் துன்புறுவது. எம் துன்பந் தீர்ந்தாற் போல்வதென்பதாம். 'ஓ' மிகுதிப்பொருட் குறிப்புச்சொல். 'ஓ ஒ' 'தா அம்' இசைநிறையளபெடைகள். ஏகாரம்தேற்றம் .
|