பக்கம் எண் :

வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.

 

(நீயும் ஆற்றி நின் கண்களுந் தூங்குதல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

வாராக்கால் துஞ்சா-காதலர் வராதிருக்கும்போது அவர் வரவுநோக்கி வழிமேல் விழிவைத்துத் தூங்கா ; வரின் துஞ்சா-அவர் வந்த பின்போ மீண்டும் பிரிதலஞ்சித் தூங்கா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன-இங்ஙனம் அவ்விருநிலைமையிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை யடைகின்றன.

என் கண்கள் ஒருபோதும் தூங்கும் நிலைமையில்லை யென்பதாம்.