(இதுவுமது) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரேபோல்-தம்மை யிழுத்துக்கொண்டு போகுமென்பதை அறிந்திருந்தும் வேகமா யோடுகின்ற வெள்ளத்திற் பாய்வார்போல் ; பொய்த்தல் அறிந்து புலந்து என்-ஊடல் நீடு நில்லாமை யறிந்திருந்தும் கணவரோடு ஊடி என்ன பயன்? புலத்தலால் துன்பமே யன்றி யின்பமில்லை யென்பதாம் . பாய்வார்போற் புலந்து என இசையும் . பொய்த்தலறிந்தே னென்பது பாடமாயின் , உய்த்தலறிய ஒடு நீருட் பாய்வார்போல முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை யறிந்தேன்;இனி இது செய்தற் பாற் றன்றென வுரைக்க என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருத்தமே. ஏகாரம் பிரிநிலை.
|