பக்கம் எண் :

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.

 

(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.)

நலத்தகை நல்லவர்க்கு ஏர்-நற் குணங்களால் தகுதியுடைய நல்ல ஆடவர்க்கும் அழகாவது ; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் மலர் போலுங் கண்களையுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவிச் சிறப்பன்றோ ?

தான் நுகர்ந்த சிறந்த இன்பத்திற் கேதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு . தவறில்லாதவர்க்கும் புலவி இனிதென்பான் , "நலத்தகை நல்லவர்க்கும் ஏஎர்" என்றான் . அழகு இன்பப் பயனாகிய மனவெழுச்சி . சிறப்பும்மை தொக்கது . ' ஏஎர்' இசை நிறையளபெடை.