பக்கம் எண் :

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி .

 

ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் - அவ்வொழுக் கத்தினின்று தவறுவதால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர் .

ஒருவன் ஒரு குற்றஞ் செய்தபின் , அத்தகைய குற்றம் பிறர் செய்திருப்பினும் அவையும் அவன்மேல் ஏற்றப்படுவது இயல்பாதலின் , ' எய்தாப் பழி ' எய்துவர் என்றார் .