பக்கம் எண் :

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை.

 

பயன் இல பாரித்து உரைக்கும் உரை - ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே; நயன் இலன் என்பது சொல்லும் - அவன் நேர்மை (நீதி) யில்லாதவன் என்பதை அறிவிக்கும்.

அறிவித்தலும் பயனளவிற் சொல்லுதலை ஒக்குமாதலின் 'சொல்லும்' என்றார்.