தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும்; தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு - தகுதியுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம். இதனால், இடைவிடாது முயற்சி செய்து மேன்மேலும் பொருளீட்டாது இருந்துண்ணும் சோம்பேறித்தனமும், தகுதியில்லாதவர்க்குச் செய்யும் தவறான வேளாண்மையும் விலக்கப்பட்டன. குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும். ஆதலின், ஒப்புரவாளனுக்கு இடைவிடா முயற்சி வேண்டுமென்பதாம். பொருளுள்ளவரும் தமிழைக்கெடுப்பவரும் தகுதியற்றவராவர். ஒப்புரவாளன் என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது. |