ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும்செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான். உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங் கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார். |