நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவாளன் வறியவனாதலாவது; செயும்நீர செய்யாது அமைகலா வாறு - தவிராது செய்யும் தன்மையவான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலைமையே. அமைதியற்றிருக்கும் நிலைமையாவது வருந்துதல். ஒப்புரவுசெய்யவியலாவாறு செல்வம் அற்றவிடத்து, பிறரை நுகர்வியாமைபற்றியேயன்றித் தான் நுகராமை பற்றி வருந்துவதில்லை யென்பதாம். |