பக்கம் எண் :

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்?.

 

புகழ்பட வாழாதார்-தமக்குப் புகழுண்டாக வாழாதவர்; தம் நோவார்-அது பற்றிப் பிறர் தம்மை யிகழ்ந்த விடத்து அதற்குக் கரணியமான தம்மையே நொந்து கொள்ளாது; தம்மை இகழ்வாரை நோவது எவன் - தம்மை யிகழ்ந்தவரை நோவது எதற்கு?

புகழ்பட வாழாமையின் தீய விளைவு இங்குக் கூறப் பட்டது.