பக்கம் எண் :

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

 

தீரத் துறந்தார் தலைப்பட்டார் -முற்றத்துறந்தவர் வீட்டை யடைந்து உயர்ந்தார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனந் துறவாதவர் மயங்கிப் பிறவி வலைக்குள் அகப் பட்டார்.

மயங்குதல் நிலையாதவற்றை நிலைத்தனவாகக் கருதுதலும் ஏதேனுமொரு பொருளின்கண் சிறிதேனும் பற்றுவைத்தலும். 'மற்றையவர்' முற்றத் துறவாதாரும் சற்றுந் துறவாதாரும். தலைப் படுதல் அடைதல் அல்லது உயர்தல்.