பக்கம் எண் :

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்

 

பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்- ஒருவனுக்கு இருவகைப் பற்றும் நீங்கியபொழுதே அப்பற்று நீக்கம் அவன் பிறப்பை ஒழிக்கும் ; மற்று நிலையாமை காணப்படும் - அவை நீங்காத பொழுது அவற்றால் மாறிமாறிப் பிறந்திறந்து வருகின்ற நிலையாமையே காணப்படும்.

கரணகம் (காரணம்) நீங்கின் கருமகமும் (காரியமும்) நீங்குமாதலால் 'பற்றற்ற கண்ணே' என்றார். மற்று - மற்றப்படி