பக்கம் எண் :

அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்.

 

அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் -அறிவில்லாதவர் அதனை முன்னறியும் ஆற்றலில்லாதவர்.

முன்னறிதல் எண்ணியறிதலும் எண்ணாதறிதலும் என இருவகை. எண்ணியறிதல் பொதுவகைப்பட்ட அறிஞர் செயல்; எண்ணா தறிதல் இறைவனால் முற்காணியர்க்கு (Prophets) அளிக்கப் பட்ட ஈவு.

"பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்" என்று மணக் குடவபரிப்பெருமாளரும் , "அறிவுடையவர் ஆகும் காரியம் அறிவார்". என்று பரிதியாரும், "உலகத்து அறிவுடையோர் ----------- தமக்கு இருமை ஆக்கமும் ஆவதனை அறிந்து ஒழுகுவாரே." என்று காளிங்கரும், உரைப்பர். தமக்கு நன்மையாவதை அறிவது தன்னல வியல்பேயன்றி அறிவுடைமையாகாது.