தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் - முன்பு தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப் பின்பு பிறர் குற்றத்தைக்காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது ? ஒன்று மில்லை. இது குடிகளின் வழக்குத் தீர்த்துத் தண்டித்தல் பற்றியது. பிறர் குற்றங்கண்டு தண்டிப்பவன் முன்பு தான் அக்குற்றமில்லாதவனா யிருத்தல் வேண்டும். அரசன் தன் குற்றத்தை நீக்காது பிறர் குற்றத்திற்குத் தண்டிப்பதே கு ற் ற மா ம். அங்ஙன மன்றித்தன் குற்றத்தை நீக்கியபின் தண்டிப்பின் அது முறைசெய்தலாம். அது அவன் கடமையாதலால் 'என்குற்ற மாகும்' என்றார். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை.
|