தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்க அமைச்சரைச் சுற்றமாகவுடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை; செற்றார் செயக்கிடந்தது இல் - பகைத்தவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்று மில்லை. தக்கார் அமைச்சுத் தொழிலுக்குத் தகுதியுடையார். நட்புப்பிரித்தல், பகைபெருக்குதல், உட்பகை விளைத்தல், பொருதல், வஞ்சித்தல், முதலிய பல்வேறு வலக்காரங்களை (தந்திரங்களை)ப் பகைவர் கையாளினும், தகுந்த அமைச்சர் துணைகொண்டு தானும் அறிந்தொழுக வல்லானுக்கு ஒரு தீங்குஞ் செய்ய முடியா தென்பார், 'செற்றார் செயக்கிடந்த தில் ' என்றார்.
|