மன்னவன் முறைகோடிச் செய்யின் - அரசன் முறைதவறி ஆட்சி செய்வானாயின் ; உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டிற் பருவமழை தவறுவதால் வானம்பொழிதலைச் செய்யாது. உறைகோடுதலாவது மழை இயற்கையாகப் பெய்யவேண்டிய காலத்துப் பெய்யாமை . "வானம் பெயல்" என்பது 'வானம் பெய்கிறது' வையகம் (பூமி) விளைகிறது , என்னும் வழக்கைத் தழுவியது. உறைத்துப் பெய்யும் மழை உறை. "இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு" (குறள். 545) என்றதனால், இயல்புளிக் கோலோச்சா மன்னவ னாட்டிற் பெயலும் விளையுளா மில். என்பது தானே வெளியாம்.
"கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னு யிரில்லை" மணிமேகலை (7 : 8 - 10)
|