பக்கம் எண் :

துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.

 

துன்பம் உறவரினும்-வினைசெய்யுங்கால் தமக்குத் துன்பம் மிகுதியாக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க-அது பற்றித் தளராமல் முடிவில் இன்பந்தரும் வினையை மனத்திண்மையுடன் செய்க.

துன்பம் வருங்காலம் குறிக்கப்படாமையின், வினையின் முதலிடை கடையில் மட்டுமன்றி முழுமையுந் துன்பம் வரினும் பொறுக்க வேண்டு மென்பதாம். பிள்ளை பெறுபவளின் துன்பம் பிள்ளை பெற்றபின் இன்பமாக மாறுவது போல், முயற்சித், துன்பமும் வெற்றிப்பேற்றால் இன்பமாக மாறு மென்பார், 'இன்பம் பயக்கும் வினை' என்றார். 'உற' உரிச்சொல்.