விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை வேற்றரசரிடம் சென்று கூறுபவன்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி வாய்தவறியும் தாழ்வான சொற்களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாயிருத்தல் வேண்டும். வடு-குற்றம். தாழ்வான சொற்களைச் சொல்லுதல் தன் தகுதிக் கேற்காத குற்றமாதலின், ' வடுமாற்றம்' என்றார். வாய் சோராமைக்கு ஏதுவான வன்கண் என்க.
|