உவப்பினும் காயினும் தான் முந்து உறும்-ஒருவர் இன்னொருவரை விரும்பி மகிழ்ந்தாலும், வெறுத்துச் சினந்தாலும், தான் அவற்றை முன்னறிந்து அவற்றைப் பிறர்க்கு அறிவிப்பதில் வாயினும் முற்பட்டு நிற்றலால்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ-முகத்தைப்போல் அறிவுமிக்க வேறு வுறுப்பு ஏதேனும் உண்டோ? இல்லை. ஒருவரின் விருப்பு வெறுப்புகளை அவர் வாய்திறந்து சொல்லுமுன், அவர் முகமே முறையே மலர்ந்தும் சுருங்கியும் தெரிவித்து விடுதலால் ,'முகத்தின் முதுக் குறைந்ததுண்டோ' என்றார். இங்கு முந்துறுதற் போட்டி முகத்திற்கும் வாய்க்கும் இடைப்பட்டதாம். முது=முதுமையால் உண்டாகும் அறிவு, அறிவு. முது-முதுக்கு. ஒ.நோ: மெது-மெதுக்கு. முதுக்கு உறைதல்=அறிவு தங்குதல், அறி்வடைதல். உவப்பான் காய்வான் இயல்புகள் அவர் முகத்தின்மேல் ஏற்றப்பட்டன. உணர்வான் செயல் அவன் கண்ணின்மேல் ஏற்றப்பட்டதுபோல்(705.)
|