பக்கம் எண் :

பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின்.

 

கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்- அரசரின் பார்வை வேறுபாடுகளை அறியவல்ல அமைச்சரைப் பெற்றால்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-அவ்வரசர்க்குப் பிறரோடுள்ள பகைமையையும் நட்பையும் அவர் கண்களே தெரிவிக்கும்.

பார்வை வேறுபாடுகள் எண்சுவையோடு சமந்தமும்(சாந்தமும்)சேர்ந்த தொண்சுவை(நவரசம்) பற்றியன; பகைமை பற்றிய சின நோக்கு கண் சிவப்பாலும், நட்புப்பற்றிய மகிழ்நோக்கு கட் பொலிவாலும், அறியப்படும். 'கண்' இரண்டுட் பின்னது ஆகுபெயர்.