பக்கம் எண் :

சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை.

 

சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும் இல்லாயின்-வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு நீங்காத லெறுப்பும் ஏழைமையும் தனக்கில்லாவிடின்; படை வெல்லும்-படை பகைவரை வெல்லும்.

சிறுத்தல் படை மறவர் விலகுவதால் நேர்வது. இச்சிறுமையும் வறுமையும் அரசன் பொருள் கொடாமையால் வருவன. 'செல்லாத்துணி' பெண்டிரை அரசன் கைப்பற்றுவதாலும் பிற இழிசெயல்கள் செய்வதாலும் ஏற்படுவது. இம் மூன்றும் உள்ளவிடத்து அரசன் மீது அன்பு கொண்டு ஊக்கமாய்ப் பொரா ராதலால், இல்லாயின் வெல்லும், என்றார்.