பக்கம் எண் :

மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவும் தரும்.

 

மனம் மாணா உட்பகை தோன்றின் - புறத்தில் திருந்தியதுபோல் தோன்றி அகத்தில் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமாயின்; இனம்மாணா ஏதம் பலவும் தரும் - அது அவனுக்குச் சுற்றம் துணையாகாமைக் கேதுவாகிய பல குற்றத்தையும் உண்டுபண்ணும்.

'இன மாணா ஏதம்' சுற்றத்தாரை உள்ளாக நின்று வேறுபடுத்தலும் அவர்வேறு படுதலும் அதனால் அவர்துணை இல்லாமற்போதலுமாம்.