பக்கம் எண் :

உறன்முறையானுட்பகை தோன்றி னிறன்முறையா
னேதம் பலவுந் தரும்.

 

உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறம்பாக உறவு முறையொடு கூடிய உட்பகை ஒருவனுக்கு, சிறப்பாக அரசனுக்கு, உண்டாகுமாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அது அவனுக்கு இறக்குந் தன்மையான பல குற்றத்தையும் உண்டுபண்ணும்.

உட்பகையுற்றவன் அரசனாயின், புறப்பகைக்குத் துணையாய் நின்று காட்டிக் கொடுத்தலும் தானேகொல்லுதலும் அமைச்சு முதலிய உறுப்புக்களைக் கெடுத்தலும், உட்பகையால் வரும் ஏதங்களாம்.