குடிப் பிறந்தார்கண் குற்றம் - உயர்குடிப் பிறந்தவரிடத்திலுள்ள குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் - வானத்தின்கண் வெண்ணிலாவிலுள்ள களங்கம்போல் எல்லார்க்குந் தெரியுமாறு உயர்ந்து விளங்கித் தோன்றும். விசும்பு மதி மறு என்னும் மூன்றும், முறையே, குடி குடிப்பிறந்தார் குற்றம் என்னும் மூன்றற்கும் உவமமாம். குடியின் உயர்வினாலும், வெண்ணிலாப் போன்ற குடிப் பண்பொடு பொருந்தாமையாலும், கறைபோலுங் குற்றம் உலகெங்கும் விளங்கித் தோன்று மென்பதாம்.
|