பக்கம் எண் :

நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

 

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு இம்மை மறுமை நன்மைகளை வேண்டுவானாயின்; தான் நாணமுடையவனா யிருத்தல் வேண்டும்; குலம். வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக - தன் உயர்குடிப் பிறப்பைக் காத்துக் கொள்ள விரும்புவானாயின், பெரிய ரெல்லாரிடத்தும் பணிவுடைய வனாயிருத்தல் வேண்டும்.

இம்மை நன்மை புகழும், மறுமை நன்மை அறப்பயனுமாம். 'வேண்டும்' என்பது கட்டாயம் பற்றிய நெறியீடு (விதி). 'நாண்' என்றது கருமத்தால் நாணுதலை (குறள 1091). ஐங்குரவர், அந்தணர், சான்றோர், அடியார் முதலிய அனைவரும் அடங்க 'யார்க்கும்' என்றார். 'பணிவு' இருக்கை விட்டெழுதலும் எதிர்செலவும் கை குவிப்பும் முதலியன. இவ்விரு குறளாலும் உயர் குடிப்பிறப்பைக் காத்துக் கொள்ளும் வகை கூறப்பட்டது.