89. உட்பகை - Enmity Within |
| | 1. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். | Water and shade, if they unwholesome prove, will bring you pain; And qualities of friends, who treacherous act, will be your bane.
| 881 | | |
| | 2. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. | Dread not the foes that as drawn swords appear; Friendship of foes, who seem like kinsmen, fear!
| 882 | | |
| | 3. உள்பகை அஞ்சித் தன்காக்க உலைவுஇடத்து மண்பகையின் மாணதெறும். | Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knife.
| 883 | | |
| | 4. மனம்மாணா உள்பகை தோன்றின் இனம்மாணா ஏதம் பலவும் தரும். | If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt.
| 884 | | |
| | 5. உறல்முறையான் உள்பகை தோன்றின் சிறல் முறையான் ஏதம் பலவும் தரும். | Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wise.
| 885 | | |
| | 6. ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. | If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the door.
| 886 | | |
| | 7. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உள்பகை உற்ற குடி. | As casket with its cover, though in one they live alway, No union to the house where hate concealed hath sway.
| 887 | | |
| | 8. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. | As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath sway.
| 888 | | |
| | 9. எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உள்பகை உள்ளதாம் கேடு. | Though slight as shred of 'sesame' seed it be, Destruction lurks in hidden enmity.
| 889 | | |
| | 10. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கர்உள் பாம்போடு உடன்உறைந்து அற்று. | Domestic life with those who don’t agree, Is dwelling in a shed with snake for company.
| 890 | | |
|
|