121. நினைந்தவர் புலம்பல் - Sad Memories |  
 |   |  1. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.  |  From thought of her unfailing gladness springs, Sweeter than palm-tree wine the joy love brings.
  | 1201 |  |   |  
 |   |  2. எனைத்தொன்று இனிதே காண்காமம் தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்றுஇல்.  |  How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no grief.
  | 1202 |  |   |  
 |   |  3. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.  |  A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies stray?  | 1203 |  |   |  
 |   |  4. யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்.  |  Have I a place within his heart! From mine, alas! he never doth depart!  | 1204 |  |   |  
 |   |  5. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம் நெஞ்சத்து ஓவா வரல்.  |  Me from his heart he jealously excludes; Hath he no shame who ceaseless on my heart intrudes?
  | 1205 |  |   |  
 |   |  6. மற்றுயான் என்உளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்.  |  How live I yet? I live to ponder o'er The days of bliss with him that are no more.
  | 1206 |  |   |  
 |   |  7. மறப்பின் எவன்ஆவன் மற்கொல் மறப்புஅறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.  |  If I remembered not, what were I then? And yet, The fiery smart of what my spirit knows not to forget?
  | 1207 |  |   |  
 |   |  8. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ காதலர் செய்யும் சிறப்பு.  |  My frequent thought no warth excites, Is it not so? This honour doth my love on me bestow.
  | 1208 |  |   |  
 |   |  9. விளியும்என் இன்உயிர் வேறுஅல்லம் என்பார் அளிஇன்மை ஆற்ற நினைந்து.  |  Dear life departs, when his ungracious deeds I ponder o'er, Who said erewhile, 'We 're one for evermore'.
  | 1209 |  |   |  
 |   |  10. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.  |  Set not, so may'st thou prosper, moon! that eyes may see My love who went away, but ever bides with me.
  | 1210 |  |   |   
	
	
				
				 | 
				 
			 
			 |