207 102. நாணுடைமை - Sensitiveness to shame | |
1. கருமத்தால் நாணுதல் நாணுத்; திருநுதல் நல்லவர் நாணுப் பிற. | To shrink from evil deed is shame The rest is blush of fair-faced dame.
| 1011 | |
2. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. | Food, dress and such are one for all Modesty marks the higher soul.
| 1012 | |
3. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. | All lives have their lodge in flesh Perfection has its home in blush.
| 1013 | |
4. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை. | Shame is the jewel of dignity Shameless swagger is vanity.
| 1014 | |
5. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு. | In them resides the sense of shame Who blush for their and other's blame.
| 1015 | |
6. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். | The great refuse the wonder-world Without modesty's hedge and shield.
| 1016 | |
7. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர். | For shame their life the shame-sensed give Loss of shame they won't outlive.
| 1017 | |
8. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து. | Virtue is much ashamed of him Who shameless does what others shame.
| 1018 | |
9. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. | Lapse in manners injures the race Want of shame harms every good grace.
| 1019 | |
10. நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று. | Movements of the shameless in heart Are string-led puppet show in fact.
| 1020 | |
|