1. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. | Farming though hard is foremost trade Men ply at will but ploughmen lead.
| 1031 | |
2. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. | Tillers are linch-pin of mankind Bearing the rest who cannot tend.
| 1032 | |
3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். | They live who live to plough and eat The rest behind them bow and eat.
| 1033 | |
4. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். | Who have the shade of cornful crest Under their umbra umbrellas rest.
| 1034 | |
5. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். | Who till and eat, beg not; nought hide But give to those who are in need.
| 1035 | |
6. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. | Should ploughmen sit folding their hands Desire-free monks too suffer wants.
| 1036 | |
7. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். | Moulds dried to quarter-dust ensure Rich crops without handful manure.
| 1037 | |
8. ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. | Better manure than plough; then weed; Than irrigating, better guard.
| 1038 | |
9. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். | If landsmen sit sans moving about The field like wife will sulk and pout.
| 1039 | |
10. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். | Fair good earth will laugh to see Idlers pleading poverty.
| 1040 | |
|