223 109. தகையணங்குறுத்தல் - Beauty's dart | |
1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. | Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!
| 1081 | |
2. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. | The counter glances of this belle Are armied dart of the Love-Angel.
| 1082 | |
3. பண்டறியேன் கூறறென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. | Not known before - I spy Demise In woman's guise with battling eyes.
| 1083 | |
4. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். | This artless dame has darting eyes That drink the life of men who gaze.
| 1084 | |
5. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. | Is it death, eye or doe? All three In winsome woman's look I see.
| 1085 | |
6. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண். | If cruel brows unbent, would screen Her eyes won't cause me trembling pain.
| 1086 | |
7. கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். | Vest on the buxom breast of her Looks like rutting tusker's eye-cover.
| 1087 | |
8. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு. | Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet.
| 1088 | |
9. பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து. | Which jewel can add to her beauty With fawn-like looks and modesty?
| 1089 | |
10. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. | To the drunk alone is wine delight Nothing delights like love at sight.
| 1090 | |
|